search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி
    X

    ஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோப்வே மீட்பு ஒத்திகையின் போது மீட்பு டிராலி விபத்துக்குள்ளானதில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். #JammuKashmir #rescuetrolly accident #jammuropewayprogram
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், ஜம்மு பகுதியில் பாஹூ கோட்டை- மகாமாயா பூங்கா மற்றும் மகாமாயா-பீர் ஆகிய வழித்தடங்களில் இரண்டு கட்டங்களாக ரோப் கார் சேவை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், மகாமாயா கோயிலுக்கு அருகே நேற்று சோதனை ஓட்டம் மற்றும் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீட்பு டிராலி விபத்துக்குள்ளானது. இதில் ரோப் கார்களின் கேபிள் அறுந்து உடைந்து, மீட்பு டிராலி தரையில் விழுந்தது. இதில் டிராலியில் இருந்த ஒரு தொழிலாளர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியானவர்களில் ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என தெரியவந்தது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மற்றொருவர் பெயர் கிருஷ்ணன். இவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

    ஜம்மு ரோப்வே திட்டம் பிரதமர் மோடியால் பிப்ரவரி 3-ம் தேதி துவக்கி வைக்கப்பட இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்குமாறு ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்  உத்தரவிட்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  #JammuKashmir #rescuetrollyaccident  #jammuropewayprogram




    Next Story
    ×