search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் ராணுவம் நடத்தும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    X

    ஜம்மு காஷ்மீரில் ராணுவம் நடத்தும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    இந்திய ராணுவ மருத்துவக் குழுவின் கீழ் நடைமுறையில் உள்ள சத்பாவனா திட்டத்தின் மூலம் இரண்டு நாள் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. #JammuKashmir #Sadbhavana #ArmyMedicalCorps
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டம், கூல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ராணுவ மருத்துவ குழுவின் சார்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று தொடங்கியது. அதிகாலை முதலே ஏராளமான மக்கள் தங்களுக்குரிய அனுமதி சீட்டினை ராணுவ அதிகாரிகளிடம் பெற்று முகாமில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சைகள் முறையாக வழங்கப்பட்டன.



    இதற்காக அமைக்கப்பட்ட முகாம்களில் பல இராணுவ அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.  இந்த முகாம் இந்திய ராணுவ திட்டங்களில் ஒன்றான சத்பாவனா திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Sadbhavana #ArmyMedicalCorps

    Next Story
    ×