search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
    X

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #CentralUniversity #Cabinet
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவினம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 32 லட்சம் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அடுத்த தலைமுறை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இன்போசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.4 ஆயிரத்து 242 கோடிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதுகுறித்து மத்திய மந்திரி பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த திட்டத்தால், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறையும். ஒரே நாளில் கணக்குகள் ஆய்வு செய்து முடிக்கப்படும். இதனால், திரும்ப பெறும் தொகையையும் விரைவில் பெற முடியும். 18 மாதத்துக்கு பிறகு திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.

    பொதுத்துறையை சேர்ந்த எக்சிம் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    Next Story
    ×