search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
    X

    நேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி

    நேரு குடும்பத்தை சேராதவர்களை காங்கிரஸ் தலைவர்களாக நியமிக்க தயாரா? என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பட்டியல் மூலம் பதிலளித்துள்ளார். #Chidambaram #Congress
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி நேற்று தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.

    குவாலியர் மாவட்டத்தின் அம்பிகாபூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து உரையாற்றிய மோடி, ‘டீ விற்றவர் எப்படி பிரதமராக முடிந்தது? என காங்கிரசார் அழுது புலம்பி வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்துள்ளது? என்பதை அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    சுதந்திர நாளன்று டெல்லி செங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றி வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.  நேரு குடும்பத்தை சேராதவர்களுக்கு கட்சியின் தலைவர் பதவி கொடுத்துள்ளீர்களா?  இனி வெளிநபர்கள் யாரையாவது அந்த பதவியில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நியமிப்பீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    அவரது கேள்விக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று நீண்ட பட்டியல் மூலம் பதிலளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் ‘1947-ம் ஆண்டில் இருந்து ஆச்சாரியா கிருபாலானி, பட்டாபி சித்தராமையா, புருஷோத்தம்தாஸ் தான்டன், யூ.என். தேபர், சஞ்சீவ ரெட்டி, சஞ்சீவைய்யா, காமராஜர், நிஜலிங்கப்பா, சி.சுப்பிரமணியன், ஜகஜீவன் ராம், ஷங்கர் தயாள ஷர்மா, டி.கே.பரூவா, பிரமானந்த ரெட்டி, பி.வி.நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களாக பதவி வகித்துள்ளனர் என்பதை மோடிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்’ என குறிப்பிட்டிள்ளார்.

    மேலும், சுதந்திரத்துக்கு முன்னர் பாபா சாகேப் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர்  என்பதையும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.



    மேலும், காங்கிரஸ் தலைவராக யார் தேர்வாகிறார்கள் என்பதில் பிரதமர் மோடி காட்டிவரும் அக்கறைக்கும் இதைப்பற்றி அதிக நேரம் பேசுவதற்காகவும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதில் சரிபாதி நேரத்தையாவது பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ரபேல், சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு அவர் செலவிடுவாரா?

    இதேபோல் விவசாயிகள் தற்கொலை, பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம், படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள், காதலர்களை எதிர்க்கும் கண்காணிப்பு குழுக்கள், பசுவதை தடுப்பு தன்னார்வலர்கள் மற்றும் அதிகரித்துவரும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மோடி பேசுவாரா? எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #Chidambaram #Congress
    Next Story
    ×