search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி நாளில் இரவு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- உச்ச நீதிமன்றம் நிபந்தனை
    X

    தீபாவளி நாளில் இரவு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- உச்ச நீதிமன்றம் நிபந்தனை

    தீபாவளி மற்றும் பிற பண்டிகை நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #FirecrackersSale #SupremeCourt
    புதுடெல்லி:

    காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

    அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அந்த நிபந்தனைகள் வருமாறு:-

    ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.


    தீபாவளி மற்றும் பிற பண்டிகை நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.

    தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால், அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #FirecrackersSale #SupremeCourt
    Next Story
    ×