search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கடைசி கட்ட தேர்தலில் வெறும் 4.2 சதவீத வாக்குப்பதிவு
    X

    காஷ்மீர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கடைசி கட்ட தேர்தலில் வெறும் 4.2 சதவீத வாக்குப்பதிவு

    ஜம்மு காஷ்மீர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இன்று நடைபெற்ற கடைசி கட்ட தேர்தலில் வெறும் 4.2 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன.#KashmirULBPolls #KashmirElection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று கடைசி மற்றும் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.



    ஸ்ரீநகர், கந்தர்பால் உள்ளிட்ட 8 உள்ளாட்சி அமைப்புகளுக்கான 132 வார்டுகளில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இதில்  44 வார்டுகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 52 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  எனவே, மீதமுள்ள 36 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 4.2 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக 4 கட்ட தேர்தல்களிலும் சேர்த்து சராசரியாக 35.1 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வரும் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் இந்த  தேர்தலை புறக்கணித்ததால், வாக்குப்பதிவு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KashmirULBPolls #KashmirElection
    Next Story
    ×