search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டாள்த்தனத்துக்கான ஒரே இடம் காங்கிரஸ் கட்சி - அமித் ஷா காட்டம்
    X

    முட்டாள்த்தனத்துக்கான ஒரே இடம் காங்கிரஸ் கட்சி - அமித் ஷா காட்டம்

    முட்டாள்த்தனத்துக்கான ஒரே இடமாக காங்கிரஸ் கட்சி இருப்பதாக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #BhimaKoregaon #UrbanNaxals #Amitsha #Congress #idiocy
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கோரேகான்-பீமா கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 
     
    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இதனை அடுத்து, வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். 

    இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

    இந்த மனுக்களை அவ்வப்போது விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வு சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்ததோடு 5 பேரின் வீட்டுக்காவலை நீட்டித்து வந்தது. 

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி கன்வில்கர் தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில், சமூக ஆர்வர்லர்கள் கைது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை. விசாரணை நீதிமன்றத்தை அணுகி மனுதாரர்கள் கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.  5 பேரின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று கடுமையாக தாக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    மிகவும் கீழ்த்தரமாக சென்று, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை அரசியலாக்குபவர்களின் சுயரூபம் இன்று சுப்ரீம் அளித்த தீர்ப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது. நகர நக்சலிசம் என்னும் மிகத்தீவிரமான விவகாரத்தில் காங்கிரஸ் இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ள வேண்டும்.

    நாட்டை துண்டாடுபவர்கள், மாவோயிஸ்ட்டுகள் மற்றும் போலி சமூக ஆர்வலர்களுக்கு ஆதரவு அளிப்பது, நேர்மையாக நாட்டுக்காக பாடுபடுபவர்களை அவமதிப்பது ஆகிய செயல்பாடுகளின் மூலம் முட்டாள்த்தனத்துக்கான ஒரே இடமாக ராகுல் காந்தியின் தலைமையிலான  காங்கிரஸ் கட்சி ஆகிவிட்டது என அமித் ஷா இன்று அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். #BhimaKoregaon #UrbanNaxals #Amitsha #Congress #idiocy
    Next Story
    ×