search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு
    X

    ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

    ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு இந்திராணி முகர்ஜி சிபிஐ நீதிமன்றத்தில் அளித்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. #SheenaBoraMurderCase #IndraniMukerjea #CBICourt
    மும்பை:

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, கடந்த மாதம் இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.  #SheenaBoraMurderCase #IndraniMukerjea #CBICourt
    Next Story
    ×