search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நமது அரசியலமைப்பு சட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X

    நமது அரசியலமைப்பு சட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உரையற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நமது அரசியலமைப்பு சட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். #RamNathKovind
    ராய்பூர் : 

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று சத்தீஸ்கர் மாநிலம் வந்தடைந்தார். அம்மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் முதற்கட்டமாக 
    அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினார்.

    அதைத்தொடர்ந்து, பயணத்தின் இரண்டாம் நாளான இன்று  பாஸ்தர் மாவட்டம், திம்ராபால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெப்டினட் பாலிராம் காஷ்யாப் நினைவு மருத்துவ கல்லூரியை ராம்நாத் கோவிந்த் நாட்டுக்கு அர்பணித்து வைத்தார். பின்னர் அங்கு உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    நாட்டின் சில பகுதிகளில் உள்ளவர்கள் நக்சலைட்டுகளால் தவறாக வழிநடத்தப்பட்டு சமூகத்தில் வனமுறையையும், பயத்தையும் உருவாக்குகிறார்கள். நமது கலாச்சாரம் பண்பாட்டில் மட்டும் அல்ல நமது அரசியலமைப்பு சட்டத்திலும் வன்முறைக்கு இடம் இல்லை.

    நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயலப்டுத்திய சத்தீஸ்கர் அரசுக்கும் அதற்கு ஆதரவாக இருந்த மக்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். 

    மாநில நிர்வாகமும் ’புத்திசாலித்தனமான மக்களும்’ வழிதவறிய இளைஞர்களின்(நக்சல்) நம்பிக்கையை முறியடித்தை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

    கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் நாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #RamNathKovind
    Next Story
    ×