search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதிய ஜனதா ஒரு பயங்கரவாத இயக்கம்  - மம்தா பானர்ஜி காட்டம்
    X

    பாரதிய ஜனதா ஒரு பயங்கரவாத இயக்கம் - மம்தா பானர்ஜி காட்டம்

    மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் பாரதிய ஜனதா கட்சி ஒரு பயங்கரவாத இயக்கம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #MamataBanerjee
    கொல்கத்தா :

    மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் தலைவர் திலிப் கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பா.ஜ.க.வினரிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். நம்மை அச்சுருத்துகிறார்கள், இவ்வாறான போக்குகளில் ஈடுபடும் அவர்கள் சிறைக்கு தான் செல்வார்கள் அல்லது என்கவுன்டரில் கொல்லப்படுவார்கள் என சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் பேசியிருந்தார்.

    இந்நிலையில், இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக கொலகத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,  ‘‘பா.ஜ.க.வினர் டெல்லியில் அதிகாரத்தில் உள்ளனர் எனும் மமதையில் அக்கட்சியினர் திரிணாமுல் காங்கிரஸ்காரர்களை என்கவுன்டர் செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.

    தைரியம் இருந்தால் அவர்கள் எங்களை தொட்டுப்பார்க்கட்டும், பிறகு தானாக அவர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு கொண்டுசென்று வைக்கப்படுவார்கள்.

    பா.ஜ.க.வினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே மட்டும் சண்டையை தூண்டிவிட்டு ஆதாயம் அடையவில்லை. அவர்கள், இந்துக்களையும் உயர்சாதி மற்றும் கீழ்சாதி என பிளவுபடுத்தி மோதலை உருவாக்குகிறார்கள். ஆகவே, நாங்கள் ஒன்றும் பாரதீய ஜனதாவை போன்று ஒரு பயங்கரவாத இயக்கம் கிடையாது” என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #MamataBanerjee
    Next Story
    ×