search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் - முதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகம்
    X

    ராஜஸ்தான் - முதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகம்

    ராஜஸ்தானில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியை ஒரு நாள் கலெக்டராக்கி மாவட்ட நிர்வாகம் கவுரவித்துள்ளது. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இவரது எதிர்கால விருப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாவட்ட கலெக்டராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி வந்தனா குமாரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், அவரை தன் இருக்கையில் அமரவைத்து கவுரவித்தார்.

    இதுதொடர்பாக, கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற வந்தனா குமாரி, தான் கலெக்டராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ஆசையை ஊக்குவிக்க முடிவு செய்தோம். எனவே, அவரை ஒரு நாள் கலெக்டராக என் இருக்கையில் அமர வைத்தேன். அங்கு அவர் சில பணிகளை மேற்பார்வையிட்டார் என தெரிவித்தார்.

    முதலிடம் பிடித்த மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    Next Story
    ×