search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "topper"

    ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #RahulGandhi #CAtopper

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரை சேர்ந்தவர் ஷதாப் உசேன். இவரது அப்பா டெய்லராக வேலை பார்த்து வருகிறார். ஷஹாப் உசேன் சமீபத்தில் சிஏ தேர்வை முதல் முறையாக எழுதினார். 

    இதற்கிடையே, சிஏ தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. அதில் ஷதாப் உசேன் 800 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது 74.63 சதவீதமாகும்.



    இந்நிலையில், ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறுகையில், வாழ்த்துக்கள் ஷதாப். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் பயணத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #CAtopper
    ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் சண்டிகாரை சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். #JEEResult #PranavGoyal #Topper
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘ஜே.இ.இ. அட்வான்ஸ்டு’ என்னும் மேம்பட்ட கூட்டு நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. முதல் முதலாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் சண்டிகாரை சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். ராஜஸ்தானை சேர்ந்த மீனாள் பராக் என்ற மாணவி 318 மதிப்பெண்கள் எடுத்து மாணவிகளில் முதல் இடம் பெற்றார்.

    மாணவர்கள் இந்த தேர்வு முடிவினை அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in -ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். செல்போனில் பதிவு செய்தவர்கள், தேர்வு முடிவை குறுந்தகவல் மூலம் அறியலாம். வரும் 15-ந் தேதி முதல் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 11 ஆயிரத்து 279 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 18 ஆயிரத்து 138 பேர் தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ராஜஸ்தானில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியை ஒரு நாள் கலெக்டராக்கி மாவட்ட நிர்வாகம் கவுரவித்துள்ளது. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இவரது எதிர்கால விருப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாவட்ட கலெக்டராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி வந்தனா குமாரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், அவரை தன் இருக்கையில் அமரவைத்து கவுரவித்தார்.

    இதுதொடர்பாக, கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற வந்தனா குமாரி, தான் கலெக்டராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ஆசையை ஊக்குவிக்க முடிவு செய்தோம். எனவே, அவரை ஒரு நாள் கலெக்டராக என் இருக்கையில் அமர வைத்தேன். அங்கு அவர் சில பணிகளை மேற்பார்வையிட்டார் என தெரிவித்தார்.

    முதலிடம் பிடித்த மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    ×