search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம்
    X

    சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம்

    சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். #CBSE10THResult2018
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

    இந்த தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொத்த மதிப்பெண்ணான 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

    அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த ப்ரகார் மிட்டல், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரை சேர்ந்த ரிம்ஷிம் அகர்வால், ஷாம்லியை சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரளா கொச்சியை சேர்ந்த ஸ்ரீலக்‌ஷ்மி ஆகிய நான்கு பேரும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். 

    மண்டல வாரியாக தேர்வு முடிவுகளில் திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது. சென்னை மண்டலம் 97.37 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும், அஜ்மீர் மண்டலம் 91.86 சதவிகித தேர்ச்சியுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
    Next Story
    ×