search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தேசிய தினம் - அட்டாரி எல்லையில் இனிப்புகள் பரிமாற்றம்
    X

    பாகிஸ்தான் தேசிய தினம் - அட்டாரி எல்லையில் இனிப்புகள் பரிமாற்றம்

    பாகிஸ்தானில் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி வாகா - அட்டாரி எல்லையில் இந்திய வீரர்களுடன் அந்நாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். #PakistanDay
    சண்டிகர்:

    1956-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமிய குடியரசு நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டினர் தேசிய தினமாக கடைபிடித்து வருகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அந்நாட்டு ஜனாதிபதி கொடியேற்றி ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.

    ஜோர்டான், சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தேசிய தினத்தை ஒட்டி அட்டாரி - வாகா எல்லையில் இந்திய வீரர்களுடன் அந்நாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். #PakistanDay #TamilNews
    Next Story
    ×