search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவன் கல்யாண் மீது மான நஷ்ட வழக்கு தொடர சந்திரபாபு நாயுடு மகன் முடிவு
    X

    பவன் கல்யாண் மீது மான நஷ்ட வழக்கு தொடர சந்திரபாபு நாயுடு மகன் முடிவு

    எனது தந்தை சந்திரபாபு நாயுடு மற்றும் என் மீதும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் பவன்கல்யாண் மீது மான நஷ்ட வழக்கு தொடர ஆலோசிக்கப்பட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் கூறினார்.
    நகரி:

    ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது மகன் லோகேஷ் மந்திரியாக உள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் திடீரென்று முதல்வர் சந்திர பாபுநாயுடு, லோகேஷ் மீது ஊழல் புகார்கள் கூறினார்.

    லோகேஷ் ஊழல்கள் செய்து சட்டசபை தேர்தலுக்காக பணம் சேர்க்கிறார். இதை அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் என்னிடம் கூறினார்கள். ஆந்திர மாநிலம் ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றார்.

    இதற்கு பதிலளித்து சந்திர பாபுநாயுடு, தனக்கு எதிராக பவன்கல்யாணை மத்திய அரசு தூண்டி விடுவதாக கூறினார்.

    இதற்கிடையே விஜயவாடாவில் மந்திரி லோகேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தை சந்திரபாபு நாயுடு, என் மீது நடிகர் பவன்கல்யாண் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    வழக்கு தொடர்வது பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும். நடிகர் பவன் கல்யாண் கூறும் ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் அதை பிரதமரிடம் கொடுங்கள் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுங்கள். எங்களிடம் 4 ஆண்டுகள் இருந்த போது ஊழல்கள்பற்றி எதுவும் தெரியவில்லை. அரசியல் ஆதாயத்துக்கான பவன்கல்யாண் இப்படி பேசுகிறார். அவரை மோடி இயக்குகிறார். அவர் சொல்படி பவன்கல்யாண் ஆடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×