search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகலாந்து, மேகாலயாவில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரசாரம்
    X

    நாகலாந்து, மேகாலயாவில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரசாரம்

    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். #narendramodi #Meghalayapoll
    ஷில்லாங்:

    நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில சட்டசபைகளுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்து பலமாக காலூன்றி இருக்கும் பா.ஜ.க. தேர்தலை எதிர்நோக்கியுள்ள மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இவ்விரு மாநிலங்களிலும் நாளை சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நாகலாந்து மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள டுவென்சாங் மாவட்டத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, அங்கிருந்து மேகாலயாவுக்கு செல்கிறார். 

    கடந்த 1972-ம் ஆண்டு மேகாலயா தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட நாளில் இருந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழும் மேற்கு காரோ குன்றுகள் மாவட்டம் மற்றும் புல்பாரி நகரில் நடைபெறும் பிரசார கூட்டங்களிலும் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #tamilnews #narendramodi #Meghalayapoll 
    Next Story
    ×