search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
    X

    தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

    கிராம சபை கூட்டத்தில் மந்திரியை தாக்கிய வழக்கில் தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
    நகரி:

    கிராம சபை கூட்டத்தில் மந்திரியை தாக்கிய வழக்கில் தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்த வட்டி வசந்தகுமார் தலைமையில் தெந்துலூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் தற்போது தெந்துலூர் தொகுதியின் தெலுங்குதேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சென்மைனேனி பிரபாகர், மந்திரி வட்டி வசந்தகுமாரை தாக்கியதாக அவர் மீது தெந்துலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பீடிடோலு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கே.தீபா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எல்.ஏ. சென்மைனேரி பிரபாகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ. பிரபாகர் மீது தாசில்தார் வனஜாட்சி என்பவரை தாக்கியது உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×