search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் கந்து வட்டிகொடுமை - கைதான போலீஸ்காரரின் மனைவி சிறையில் அடைப்பு
    X

    கூடலூரில் கந்து வட்டிகொடுமை - கைதான போலீஸ்காரரின் மனைவி சிறையில் அடைப்பு

    கூடலூரில் கந்து வட்டிகொடுமையில் ஈடுபட்டு கைதான போலீஸ்காரரின் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடியில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 5-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் ஏராளமான ரேசன் கார்டு, ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்று தெரியவந்தது.

    தினேசிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட அட்டைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர் மசினகுடி போலீசில் புகார் செய்து கார்டுகளை ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததும், பணம் வாங்குவோரிடம் இருந்து இந்த முக்கிய ஆதாரங்களை பெற்று பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    தினேஷ் கொடுத்த தகவலின்படி கூடலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ள மகாலிங்கம் என்பவரது மனைவி சாரதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கந்துவட்டிக்கு பணம் கொடுத்தது தெரியவந்தது.

    அதிக வட்டிக்கு பணம் கொடுத்தல், அடையாள அட்டை, ரேசன்கார்டுகளை வாங்கிக்கொண்டு மக்களை மிரட்டி ஏமாற்றுதல், உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனையடுத்து சாரதா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த தினேசையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×