search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் வெயில் கொடுமைக்கு பெண்கள் சுருண்டு விழுந்து பலி
    X

    திண்டுக்கல்லில் வெயில் கொடுமைக்கு பெண்கள் சுருண்டு விழுந்து பலி

    திண்டுக்கல்லில் வெயில் கொடுமைக்கு 2 பெண்கள் சுருண்டு விழுந்து பலியானார்கள்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 4 ஆண்களாகவே திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு மழை இல்லை.

    குறிப்பாக திண்டுக்கல் நகர் பகுதியில் மழையை காண்பது அரிதாகி உள்ளது. கஜாபுயலின்போதும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பெய்தபோதும் திண்டுக்கல் நகரை ஏமாற்றி சென்றது.

    நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் பாக்கெட்டுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதில்லை. டீக்கடைகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் வெளியே வைப்ப தில்லை.

    பொதுவாக கோடை காலத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் மற்றும் மோர் வழங்குவார்கள்.

    இந்த ஆண்டு திண்டுக்கல் பகுதியில் தண்ணீர் அமைக்க முன்வரவில்லை. பணம் இருப்பவர்கள் குடிநீர் பாட்டிலை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். ஆனால் ஏழை, எளிய பொதுமக்கள் அடிப்படை தேவையான தண்ணீருக்காக ஏங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நீண்ட நேரமாக படுத்திருந்தார். பொதுமக்கள் அவரை தட்டி எழுப்பியபோது இறந்தது தெரிய வந்தது. இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கீதாதேவி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டி யார்? எந்த ஊர்? என்பது தெரிய வில்லை. அவரிடம் சில மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மூதாட்டி மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.

    இதேபோல் வேடப்பட்டி ரெயில் தண்டவாளத்தில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் 70 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×