search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயிலில் ஒரேநாளில் 2.10 லட்சம் பேர் பயணம்
    X

    மெட்ரோ ரெயிலில் ஒரேநாளில் 2.10 லட்சம் பேர் பயணம்

    மெட்ரோ ரெயிலில் 10-ந் தேதி 67 ஆயிரம் பேரும், 11-ந்தேதி 2 லட்சம் பேரும் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று (12-ந்தேதி) ஒரே நாளில் 2 லட்சத்து 10 ஆயிரம் பொதுமக்கள் பயணம் செய்தனர். #Metrotrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன.

    இதில் பணிகள் முடிந்து விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில் இயங்கி வந்த நிலையில் மீதமுள்ள டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகளும் முடிந்தது.

    இதையடுத்து கடந்த 10-ந்தேதி டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்மூலம் மெட்ரோ ரெயில் சேவையில் முதல்கட்ட பணிகள் முழுமையாக முடிந்தது.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே புதிய சேவை தொடங்கப்பட்டதையொட்டி கடந்த 10, 11 மற்றும் 12-ந்தேதிகளில் மெட்ரோ ரெயில் அனைத்து மார்க்கங்களிலும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது.

    இதனால் பலர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். இதையடுத்து இன்றும் மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது.

    மெட்ரோ ரெயிலில் 10-ந் தேதி 67 ஆயிரம் பேரும், 11-ந்தேதி 2 லட்சம் பேரும் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று (12-ந்தேதி) ஒரே நாளில் 2 லட்சத்து 10 ஆயிரம் பொதுமக்கள் பயணம் செய்தனர்.

    மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவையை ஓரளவுக்கு பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    தற்போது இலவச பயணம் என்று அறிவித்துள்ளதால் இதுவரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யாதவர்கள் கூட அதன் அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை உணர பயணம் செய்து வருகிறார்கள். இன்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன்மூலம் பொதுமக்கள் பார்வை மெட்ரோ ரெயில் போக்குவரத்து மீது விழும் என்று மெட்ரோ நிர்வாகம் நம்புகிறது. #Metrotrain
    Next Story
    ×