search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?- ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
    X

    தஞ்சை கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?- ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

    தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என்பது குறித்து தொல்லியல் துறை அதிகாரி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #HCMaduraiBench
    மதுரை:

    தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 7-ந்தேதி ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் 2 நாட்கள் தியான பயிற்சி நடைபெற இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது முற்றிலும் வீதிமீறலாகும். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    மேலும் தியான நிகழ்ச்சிக்காக கட்டணமும் வசூல் செய்து உள்ளனர். எனவே கோவிலின் பழமையை காக்கும் வகையில் இந்த தியான பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனியார் தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.


    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது பாரம்பரியமிக்க தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தஞ்சை மாவட்ட தொல்லியல் துறை பாதுகாப்பு உதவியாளர் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். #HCMaduraiBench
    Next Story
    ×