search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் சீரமைக்கப்பட்ட தொங்கு பாலம் திறப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    X

    ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் சீரமைக்கப்பட்ட தொங்கு பாலம் திறப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் சீரமைக்கப்பட்ட தொங்கு பாலம் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி, கடமான், காட்டெருமை, மலபார் அணில், நீலகிரி லங்கூர் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த பகுதி நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் சூழல் சுற்றுலாவாக செயல்பட்டு வருகின்றது.

    அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக சால்வியா, மேரிகோல்டு போன்ற மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. பூங்கா வளாகத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இரண்டு தங்கும் விடுதிகள், அதன் முன்பு காட்டெருமை, சிறுத்தைப்புலி, புலி, கடமான் ஆகிய வனவிலங்குகளின் உருவபொம்மைகள் தத்ரூபமாக காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    கேர்ன்ஹில் வனப்பகுதியில் பொருள் விளக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நீலகிரி வரையாடு, புள்ளி மான், நீலகிரி லங்கூர் குரங்கு, சிறுத்தைப்புலி ஆகிய வனவிலங்குகளின் மாதிரிகள் பதப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த வனப்பகுதிக்குள் 1½ கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த மரங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து செல்கிறார்கள். மரங்களுக்கு நடுவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொங்கு பாலத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த பலகைகள் பழுதடைந்து கீழே விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தொங்கு பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் இருபுறங்களிலும் உள்ள கதவுகள் பூட்டு போடப்பட்டது. அதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் தொங்கு பாலத்தில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அதனை தொடர்ந்து பழுதடைந்து காணப்படும் தொங்கு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து வனத்துறையினர் கீழே விழுந்த மர பலகைகளுக்கு பதிலாக, புதிய பலகைகளை பொருத்தி சீரமைத்து உள்ளனர். மேலும் தொங்கு பாலம் பொலிவு இல்லாமல் காணப்பட்டதால், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது. தற்போது சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்காக தொங்கு பாலம் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
    Next Story
    ×