search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
    X

    விருதுநகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

    விருதுநகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். #Dengueawareness

    விருதுநகர்:

    பள்ளி கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆர்.ஆர்.நகர் அமிர்தா பவுண்டேசன் சார்பில் விருதுநகர் ஹவா பீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மற்றும் தனித்திறன் போட்டிகள் நடந்தன.

    விழிப்புணர்வு பேரணியை தாளாளர் ஹக்கிம் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பள்ளியில் இருந்து தேசபந்து மைதானம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

    பின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதன் பரிசளிப்பு விழாவுக்கு அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை யாசிரியர் ஜமுனாராணி முன்னிலை வகித்தார்.

    தேசிய இளையோர் விருதாளர் விஜயராகவன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி சிறப்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் மரிய அருள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார். #Dengueawareness

    Next Story
    ×