search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
    X

    நிலக்கோட்டையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

    நிலக்கோட்டையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதைத் தொடர்ந்து பேரூராட்சியை கண்டித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    நிலக்கோட்டை பேரூராட்சி 9-வது வார்டு என்.புதுப்பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பழங்குடியின மக்கள் ஆவர். கடந்த 20 நாட்களாக இப்பகுதியில் பரவி வந்த மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலியானான். இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

    பேரூராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை தடுக்க முன் வராத அதிகாரிகள் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பரபரப்பு போஸ்டர் ஒட்டியுள்ளனர். தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம அமைத்து காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி உத்தரவின் பேரில் இன்று நகர் முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளித்தும் சாக்கடை மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியிலும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×