search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் ஏழைத்தாயின் மகனுக்கு உதவுங்கள்...
    X

    விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் ஏழைத்தாயின் மகனுக்கு உதவுங்கள்...

    விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் ஏழைத்தாயின் மகனைக் காப்பாற்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கீழேரிபாளையத்தில் வசித்து வரும் எம்.விக்னேஷ், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாத தந்தை, வீட்டு வேலை செய்து சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தும் தாய் இருவருக்கும் விக்னேஷ்தான் ஒரே ஆறுதல். குறைந்த வருமானம் என்றாலும் மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர்.

    இந்த மகிழ்ச்சியை குலைக்கும் வகையில் கடந்த 24-ம் தேதி நிகழ்ந்த விபத்து ஒட்டுமொத்த குடும்பத்தையே உலுக்கிவிட்டது. விக்னேஷ் விபத்தில் சிக்கி, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஈரோடு கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேசை, டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, தலையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஆபரேசன் செய்து உறைந்த ரத்தத்தை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து சுயநினைவின்றியே இருந்தார்.

    அதன்பின்னர், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய் பொருத்துவதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில், அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.

    விக்னேஷ் மற்றும் அவரது தாயாரின் மொத்த வருமானம் மாதம் 15000 ரூபாய்தான். போதிய வருமானம் இன்றி தள்ளாடிய நிலையில், இப்போது மருத்துவச் செலவுகளால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அவரது குடும்பம். கையில் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்துடன், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இதுவரை 3.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.

    ஆனால், இன்னும் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இவ்வளவு தொகையை எப்படி திரட்டுவது என தெரியாமல் அவரது பெற்றோர் விழிபிதுங்கி நிர்கதியற்று நிற்கின்றனர்.


    ஏற்கனவே விக்னேஷின் தந்தைக்கு மருத்துவ செலவுகள் செய்வதற்கு கடன் வாங்கி உள்ளனர். அந்தக் கடனை அடைத்து குடும்பத்தை கரைசேர்க்க வேண்டிய விக்னேஷ், இப்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் கிடப்பதால், அந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் தேவைப்படுகிறது. விக்னேஷின் உயிரைக் காப்பாற்ற உதவும்படி அவரது நண்பர் செய்யது முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் உதவியும், விக்னேஷின் உயிரைக் காப்பாற்றவும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவும் உதவும். ஆன்லைன் மூலம் நிதி உதவி வழங்க விரும்புவோர் எதுதர்மா என்ற இணையதளத்தை பயன்படுத்தி பணம் செலுத்தலாம், அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் தொடர்புக்கு:-

    எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

    எதுதர்மா,
    ரத்னம் டெக்சோன்,
    பொள்ளாச்சி மெயின் ரோடு,
    ஈச்சனாரி,
    கோயம்பத்தூர்,
    தமிழ்நாடு- 641021
    +919600111639
    +919087766633 

    பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை ஏதுதர்மாவின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் மாலை மலர் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.
    Next Story
    ×