search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டிகளை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தொடங்கி வைத்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், சேலம் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாகலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கபடி வீராங்கனையருக்கு சீருடைகளை வழங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பாகலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை புத்திலிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சேலம், சங்ககிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில், மூத்தோர், மேல் மூத்தோர் ஆகிய பிரிவுகளில் 10 அணிகளை சேர்ந்த 120 மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

    மேலும் இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராம் மற்றும் முனிராஜ், ரவிக்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
    Next Story
    ×