search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் - வாகன ஓட்டிகள் நிம்மதி
    X

    பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் - வாகன ஓட்டிகள் நிம்மதி

    கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியில் உள்ளனர். #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

    கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 63 காசு குறைந்து ஒரு லிட்டர் 84 ரூபாய் 70 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 78 காசு குறைந்து, 77 ரூபாய் 11 காசுக்கு விற்பனையானது.

    தொடர்ந்து பெட்ரோல்–டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது.



    கடந்த 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 18-ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 66 காசு குறைந்து, 85 ரூபாய் 22 காசுக்கு விற்பனை ஆனது.

    இதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 24 காசு குறைந்து, ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் குறைந்து 84 ரூபாய் 96 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 79 ரூபாய் 51 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

    தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகத்தில் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    Next Story
    ×