search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்காவுக்கு செல்போன் கொண்டு சென்றால் கேமரா கட்டணம் வசூல் - பார்வையாளர்கள் குமுறல்
    X

    வண்டலூர் பூங்காவுக்கு செல்போன் கொண்டு சென்றால் கேமரா கட்டணம் வசூல் - பார்வையாளர்கள் குமுறல்

    வண்டலூர் பூங்காவுக்கு கேமரா வசதியுள்ள செல்போன் கொண்டு சென்றால் கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். #VandalurPark

    சென்னை:

    வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்குள்ள புலி, சிங்கம், கரடி, முதலைகள் போன்ற விலங்குகளை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

    வண்டலூர் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்கள், குழந்தைகளுக்கு தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் கொண்டு வரும் கேமராவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேமரா வசதியுள்ள செல்போன்களுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பார்வையாளர்களில் சிலர் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்காவுக்கு செல்ல நுழைவு கட்டணம் செலுத்தி வாங்கினோம். உள்ளே செல்ல முயன்றபோது அங்கிருந்த காவலாளிகள் கேமராவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கேமரா இல்லை என்று தெரிவித்தோம். ஆனால் கேமரா வசதியுள்ள செல்போனை எடுத்து செல்வதால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைகேட்க அதிர்ச்சியாக இருந்தது. கேமராவுக்கும், செல்போன் கேமராவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பூங்கா நிர்வாகத்துக்கு தெரியவில்லையா? செல்போன் கேமராவில் ஒரளவுக்குதான் விலங்குகளை ‘ஜூம்’ செய்து படம் பிடிக்க முடியும். கேமரா போன்று படம் பிடிக்க முடியாது.

    நாங்கள் ‘செல்பி’ மட்டும் தான் எடுக்கிறோம். அதற்காக செல்போனுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி முறையாகும்?. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #VandalurPark

    Next Story
    ×