search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு- 3 நாட்களாக நடந்த தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்
    X

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு- 3 நாட்களாக நடந்த தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்

    சென்னையில் இன்று நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. #WaterLorriesStrike #TankerStrike #SPVelumani
    சென்னை:

    வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடை செய்வதுடன், வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

    அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடித்தது. 

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் தொடரும் என சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார்.

    அதன்பின்னர் நடத்தப்பட்ட இரண்டாது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசினர். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத் தலைவர் நிஜலிங்கம், 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

    குழு அமைத்து நீர் எடுப்பதற்காக ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதாக அமைச்சர் கூறினார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்றும், பொதுமக்களின் சிரமத்தை கருதியும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அவர் கூறினார். #WaterLorriesStrike #TankerStrike #SPVelumani
    Next Story
    ×