search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சானமாவு காட்டுப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டதால் கிராம மக்கள் தொடர்ந்து பீதி
    X

    சானமாவு காட்டுப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டதால் கிராம மக்கள் தொடர்ந்து பீதி

    சானமாவு காட்டுப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டதால் வனப்பகுதிக்குக்குள் யாரும் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்துள்ளன.

    இதில் 10 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு காட்டுப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளால் சானமாவு காட்டு பகுதியை சுற்றியுள்ள சானமாவு, ஆழியாலம், போடூர், ராமாபுரம், பார்த்த கோட்டா, காமன்தொட்டி, கோபச்சந்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த காட்டுப்பகுதியில் யானைகளுக்கு சரியான தீவனம் இல்லாததால் எந்த நேரமும் கிராமங்களுக்குள் புகுந்து விடலாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வனப்பகுதிக்கு யாரும் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

    Next Story
    ×