search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருதையாற்றில் ரூ.2 கோடியில் பாலம் கட்டும் பணி தொடக்கம்
    X

    மருதையாற்றில் ரூ.2 கோடியில் பாலம் கட்டும் பணி தொடக்கம்

    மருதையாற்றில் நெடுஞ்சாலை துறையின் கிராம சாலை மேம்பாடு திட்டம் மூலமாக பாலம் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனையடுத்து பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா எஸ்.குடிகாட்டில் இருந்து கொளக்காநத்தம் செல்லும் சாலையின் இடையில் மருதை ஆற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் தற்போது தரைமட்ட பாலம் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த தரை மட்ட பாலத்தில் பாலம் கட்ட வேண்டும் என குன்னம் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை அரசு அதிகாரிகளிடம் எடுத்து கூறி நெடுஞ்சாலை துறையின் கிராம சாலை மேம்பாடு திட்டம் மூலமாக பாலம் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனையடுத்து பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சந்திரகாசி எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பாலம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பெரியசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×