search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் - கலெக்டர் ஆய்வு
    X

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் - கலெக்டர் ஆய்வு

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமினை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம், மங்களமேடு டி.இ.எல்.சி. தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம், தேவையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமினை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

    இதேபோல பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×