search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி தபால் நிலையம் முன்பு கழிவு நீர் கால்வாயில் அடைப்பு சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
    X

    தருமபுரி தபால் நிலையம் முன்பு கழிவு நீர் கால்வாயில் அடைப்பு சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

    தருமபுரி தபால் நிலையத்திற்கு எதிரே உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. அதை சரி செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி தபால்நிலையம் சாலை பரபரப்பாக இருக்கக் கூடிய சாலையாகும். பேருந்து நிலையம், கடைவீதி, துணிக்கடைகளுக்கு இந்த வழியாகதான் பொதுமக்கள் செல்கின்றனர். எனவே ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்த செல்கின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் நடந்து செல்கின்றனர். 

    இந்த பகுதியில் டீக்கடை, பேக்கரி, ஓட்டல் போன்ற உணவு கடைகளும் உள்ளன. ஆனால் தபால் நிலையத்திற்கு எதிரே உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. 

    மேலும் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் கொசுக்கள் முட்டையிட்டு அதிகமாக பெருகியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகரிப்பதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கொசுக்கள் சாதாரண கொசுக்களின் அளவை விட மிகவும் பெரியதாக காணப்படுகிறது. 

    இந்த கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஒரு பகுதியில் குளம் போல் கழிவு நீர் தேங்கி உள்ளது. ஆனால் மற்றொருப் பகுதியில் கழிவு நீர் இன்றி வறண்ட காணப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்தப்பகுதியில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அதிக துர்நாற்றம் வீசுகிறது. எனவே எங்களால் இந்த பகுதியில் நுழையவே முடியவில்லை. மேலும் குப்பைகளை அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் கடைகளில் வரும் கழிவுகளை ரோடுகளில் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் அப்படியே போட்டு செல்கின்றனர். இதனால் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது.

    எனவே அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் குப்பைகளை குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். மேலும் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதை உடனே சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    Next Story
    ×