search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெட்டப்பாக்கத்தில் துணை தாசில்தார் அலுவலகம்- நாராயணசாமி திறந்து வைத்தார்
    X

    நெட்டப்பாக்கத்தில் துணை தாசில்தார் அலுவலகம்- நாராயணசாமி திறந்து வைத்தார்

    பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நெட்டப்பாக்கத்தில் துணை தாசில்தார் அலுவலகத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் தொகுதி மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்டு 25-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராம மக்கள் சாதி சான்றிதழ், பிறப்பு- இறப்பு சான்றிதழ் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள் பெற பாகூ ரில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்கே செல்ல வேண்டி இருந்தது. இதனால் காலம் விரயமாவதுடன் போக்குவரத்து செலவும் அதிக மாவதாக நெட்டப்பாக்கம் தொகுதி பொதுமக்கள் குறைபட்டு வந்தனர்.

    இதுபற்றி தொகுதி எம்.எல். ஏ.வான விஜயவேணி வெங்கடேசனிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து விஜய வேணி வெங்கடேசன் எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

    இதையடுத்து நெட்டப் பாக்கத்தில் துணை தாசில்தார் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    நெட்டப்பாக்கம் காந்தி பூங்காவில் உள்ள நூலக கட்டிட வளாகத்தில் தாசில்தார் அலுவலகம் அருகே இடம் தேர்வு செய்ய பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து துணை தாசில்தார் அலுவலகம் அமைக்கும் பணி நடந்தது. பணி நிறைவு பெற்றதையொட்டி அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவுக்கு விஜயவேணி வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துணை தாசில்தார் அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளி ஒருவருக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், வட்டார காங்கிரஸ் தலைவர் அழகானந்தம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ், காங்கிரஸ் பிரமுகர்கள் பாண்டுரங்கன், வேல்முருகன், அருணகிரி, ராமலிங்கம், சிவக்கொழுந்து, தர்மலிங்கம், சிவபிரகாசம், மணி கண்ணன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×