search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் இஸ்ரோவின் கவுன்ட் டவுன் தொடங்கியது
    X

    இரு செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் இஸ்ரோவின் கவுன்ட் டவுன் தொடங்கியது

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெளிநாட்டுக்கு சொந்தமான இரு செயற்கை கோள்களை நாளை இரவு விண்ணில் ஏவுவதற்கான இஸ்ரோ நிறுவனத்தின் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. #Countdown #ISRO #Countdown #PSLVC42
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உள்நாட்டு ஆராய்ச்சி தேவைகளுக்கான செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதுடன், வெளிநாடுகள் சார்பில் அனுப்பப்படும் செயற்கை கோள்களையும் விண்வெளியில் நிலைநாட்டும் பணிகளை செய்து வருகிறது.

    பி.எஸ்.எல்.வி. எனப்படும் ராக்கெட்கள் மூலம் இதுவரை 44 செயற்கை கோள்களை இஸ்ரோ செலுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இரண்டு செயற்கை கோள்களை செலுத்திய இஸ்ரோ, பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு செயற்கை கோள்களை நாளை (16-ம் தேதி) இரவு 10.07 மணியளவில் சென்னையில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

    வனப்பகுதி மதிப்பீட்டு ஆய்வு மற்றும் வெள்ளம், பேரழிவு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள நோவாஎஸ்ஏஆர் மற்றும் எஸ்1-4 ஆகிய இந்த இரு செயற்கை கோள்களும் சுமார் 800 கிலோ எடை கொண்டது.

    சூரியனின் வெளிவட்டப் பாதையில் பூமியில் இருந்து 583 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கான 33 மணிநேர கவுன்ட் டவுன் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு தொடங்கியது. #Countdown #ISRO #Countdown #PSLVC42
    Next Story
    ×