
கடலூர் மாவட்டத்தில் குமராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
வீடுகளை இழந்தனர். பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்தும், காவிரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் இன்று காலை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், அந்த பகுதி விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். #tamilnews