search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசு ஆஸ்பத்திரியின் சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    புதுவை அரசு ஆஸ்பத்திரியின் சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரி சீர்கேடுகளை கண்டித்து ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரி சீர்கேடுகளை கண்டித்து ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காமராஜர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு ஜனநாயக இளைஞர் சங்க தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். செயலாளர் பிரளயன் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலம் நேரு வீதி மி‌ஷன் வீதி வழியாக அரசு ஆஸ்பத்திரியை நோக்கி வந்தது. ஊர்வலத்தை போலீசார் ஆம்பூர் சாலையில் தடுத்து நிறுத்தினர். அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் சோசலிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் லெனின் துரை, ஏ.ஐ.யூ.டி.யூ.டி. தலைவர் சிவக்குமார், செயலாளர் முத்து மற்றும் நிர்வாகிகள் சங்கர், ஹரிஷ், ருத்ரா, ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் அரசு ஆஸ்பத்திரியின் சீர்கேடுகளை விளக்கும் வகையில் காய கட்டுகளுடன் சிலர் பங்கேற்றனர். அரசு ஆஸ்பத்திரியில் உயிர் காக்கும் மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    Next Story
    ×