search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறைமுகத்தில் லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன்-பணம் பறிப்பு
    X

    துறைமுகத்தில் லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன்-பணம் பறிப்பு

    சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன் மற்றும் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #robbery

    திருவொற்றியூர்:

    சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி கொண்டு செல்லும் கண்டெய்னர் லாரிகளை எண்ணூர் கடற்கரை சாலையில் வரிசையில் நிறுத்தி விட்டு டிரைவர்கள் வண்டியில் காத்து இருப்பார்கள்.

    வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் தினேஷ், திருச்சிணாங்குப்பம் அருகே நிறுத்தி விட்டு லாரியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் டிரைவர் தினேசிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

    தடுக்க முயன்ற தினேசை கத்தியால் காலில் குத்தி விட்டு அவரிடமிருந்து ரொக்கம் ஆயிரத்தை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    உடனே தினேஷ் ரோந்து சென்ற திருவொற்றியூர் போலீசாரிடம் கூறினார். அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய போது, சிறிது தூரத்தில் மற்றொரு டிரைவர் முருகேசனை கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்து செல்போன், ரூ. 800 பறித்து விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் துரத்தி சென்றனர்.

    தாங்கல் தியாகராயபுரத்தில் போலீசார் ஒருவனை பிடித்தனர். விசாரணையில் அவன் ராம்குமார் என்பது தெரியவந்தது. தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த மதனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×