search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு தஞ்சை நகர மக்கள் கண்டனம்
    X

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு தஞ்சை நகர மக்கள் கண்டனம்

    கச்சா எண்ணை விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தஞ்சை பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    கச்சா எண்ணை விலை உயர்வால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டும் அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது.

    கடந்த 24.6.2018 அன்று பெட்ரோலின் விலை 78.65 காசாக இருந்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ரூ.83.08க்கும், டீசல் ரூ.76 குகு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துக்கான தொகை, அத்தியவாசிய பொருட்கள் மற்றும் லாரி வாடகைகள் என அனைத்திற்கான தொகையும் அதிகரித்துள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி விலையை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    மேலும் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் விழிபிதுங்கி கொண்டு இருக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட மக்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டு பிரமித்து போய் உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கருத்துகேட்ட போது விலை உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தஞ்சை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாகீர் கூறியதாவது:-

    நான் கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் எங்களை போன்ற தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    ரூ.100 க்கு பெட்ரோல் போட்டால் 2½ லிட்டர் பெட்ரோல் நிரம்பும். ஆனால் தற்போது ரூ.100க்கு பெட்ரோல் போட்டால் 1.10 லிட்டர் பெட்ரோலே நிரம்புகிறது. இதனால் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக பணம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் வாய்தகராறு ஏற்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பெட்ரோல் , டீசல் விலை உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    தஞ்சை முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த ஆசிரியை கவுரி கூறியதவாது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஒட்டிகளை மட்டும் இல்லாமல் அன்றாட பொதுமக்களையும் பெரும் அளவு பாதிக்கிறது.

    விலை உயர்வால் அத்திய வாசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி மற்றும மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு விலை உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கரந்தை பகுதியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி சங்கர் கூறியதாவது:-

    நான் மோட்டார் சைக் கிளில் வெற்றிலை வியா பாரம் செய்து வருகிறேன். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தினமும் எனக்கு கிடைக்கும் வருவாயை விட பெட்ரோல், விலை அதிகரித்து உள்ளது. இதனால் என்னை போன்ற தினக்கூலி வியாபாரிகள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் விலை உயர்வை திருப்பி கேட்க முடியாது. ஆனால் அரசு இதில் தலையிட்டு விலை உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யலாம் என்றார்.

    தஞ்சை அடுத்த ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த வினோதினி கூறியதாவது:-

    நான் தஞ்சையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். தினமும் ஒரத்த நாட்டில் இருந்து தஞ்சை வந்து செல்வதற்கு மொபட்டில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பெட்ரோல் போட வேண்டி உள்ளது.

    விலை உயர்வு இதே போல் நீடித்தால் எனது வருவாயில் அதிக அளவு பெட்ரோலுக்கு என்றே ஒதுக்க நேரிடும். மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைத்ததன் விளைவே தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×