search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 நாட்களாக 100 அடிக்கு குறையாத மேட்டூர் அணை நீர்மட்டம்
    X

    50 நாட்களாக 100 அடிக்கு குறையாத மேட்டூர் அணை நீர்மட்டம்

    மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் 50 நாட்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது.
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது.

    இந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி 100 அடியை எட்டியது. பின்னர் 23-ந் தேதி அணையின் முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது.

    தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஜூலை 17-ந் தேதி முதல் இன்று வரையிலான 50 நாட்களும் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6 ஆயிரத்து 394 கன அடியாக இருந்தது. நேற்று அணையில் இருந்து 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 8 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    நேற்று 120.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.09 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×