search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்: 75 மருத்துவ குழுக்கள் அமைப்பு -கலெக்டர் மகேஸ்வரி அறிவிப்பு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்: 75 மருத்துவ குழுக்கள் அமைப்பு -கலெக்டர் மகேஸ்வரி அறிவிப்பு

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூரில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூரில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக் டர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 6 மாதத்துக்கு ஒருமுறை கோமாரி நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமைகளுக்கான தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இதுவரை 14 சுற்று முகாம்கள் முடிந்து தற்போது 15வது சுற்று முகாம் 1-ந் தேதி தொடங்கியது. இது 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 84 கால்நடை மருந்தகங்கள், 29 கால்நடை கிளை நிலையங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

    முகாம்களுக்காக கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினரால் 2 லட்சத்து 80 ஆயிரத்து 350 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி போடப்பட உள்ளது. கோமாரி நோய் தடுப்பபூசி முகாம் குறித்து ஏற்கனவே நடைபெற்ற கிராம சபா கூட்டங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் கூறினார். #tamilnews
    Next Story
    ×