
கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்த பருவமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகள் உருக்குலைந்துள்ளன. கேரளாவை மீட்டெடுக்க நிதி உதவி வழங்கும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று பல்வேறு தரப்பினரும் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ மண் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட இந்த நிதியானது, ஐ மண் தொண்டு நிறுவன நிறுவனர் ம.குப்புராஜ் மற்றும் பொருளுதவி செய்தவர்கள் முன்னிலையில் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. #KeralaFloods