search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் வினய் ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் பழமையான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க திட்ட பிரதான மற்றும் பகிர்மான குழாய்களை புனரமைப்பு செய்து தினசரி குடிநீர் வழங்கும் வகையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணைய நிதி மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி நிதியின் கீழ், ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 3 எண்ணம் மற்றும் 10 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி 1 எண்ணம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆத்தூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து 22 கி.மீ நீளத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி, 235 கி.மீ நீளத்திற்கு பகிர்மான குழாய் பதிக்கும் பணி மற்றும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 98 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. இத்திட்டம் முடிவுற்றபின் நகருக்கு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், சாலை வசதியை பொருத்தவரையில் தமிழ்நாடு நகர்புறச்சாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் - 2017-18ன் கீழ் 18.00 கி.மீ நீளமுள்ள தார்சாலை, 4.00 கி.மீ நீளமுள்ள பேவர்பிளாக் கற்கள் சாலை என மொத்தம் 22.00 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் அபிவிருத்தி பணிகளால் சேதாரமடைந்த சாலைகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் 2013-14ன் கீழ், செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    Next Story
    ×