search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையை சாக்குபையில் வைத்து வீசி சென்ற பெண் யார்? போலீசார் விசாரணை
    X

    குழந்தையை சாக்குபையில் வைத்து வீசி சென்ற பெண் யார்? போலீசார் விசாரணை

    செய்யாறு அருகே பிறந்து சில மணிநேரத்திலேயே பச்சிளம் பெண் குழந்தையை சாக்குபையில் வைத்து வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா செய்யாற்றைவென்றான் கிராமத்தில் டேங்க் தெருவினையொட்டி நிலம் உள்ளது. இப்பகுதியில் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் வீட்டிற்கு செல்லும் முன்பு அங்கு மேய்ந்து கொண்டிருந்த தங்களுடைய கோழிகளை தூரத்தி சென்று பிடித்தனர்.

    அப்போது பனை ஓலைகள் நிறைந்து கிடந்த இடத்தில் கோழி சென்றதால் அதனை பிடிக்கும் போது கோழி என நினைத்து குழந்தையின் காலை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் குழந்தை அழத் தொடங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் ஓடிச்சென்று பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் சுஜாதா (வயது 37) மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து பனைஓலைகளை எடுத்தனர். பனை ஓலைகளுக்குள்சாக்கு பையில் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை ரத்த கறையுடனும், தொப்புள் கொடியுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக சுஜாதா குழந்தையை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்து மிதமான சுடுதண்ணீரில் குழந்தையின் உடலில் இருந்து ரத்தகறைகளை சுத்தம் செய்து தூய்மைப்படுத்தினார்.

    பின்னர் சுஜாதா கொடுத்த தகவலின் பேரில் அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை நல டாக்டர் பாலாஜி பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்.

    தொடர்ந்து பச்சிளம் குழந்தை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிறந்து சில மணிநேரத்திலேயே பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற கொடூர பெற்றோர் யார்? பெண் குழந்தை பிறந்ததால் நிலத்தில் வீசிச் சென்றார்களா? வேறு ஏதேனும் காரணத்தால் குழந்தையை வீசிச் சென்றார்களா? என்று அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×