search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும்- திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    கன்னியாகுமரியில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும்- திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. இதில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்து.
    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு:- தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்டு செயல்தலைவராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் தி.மு.க.-வின் தலைமை பொறுப்பினை ஏற்க ஒன்றிய தி.மு.க வலியுறுத்துகிறது.

    நெல்லையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. தி.மு.க.-வில் தொடர்ந்து 50 ஆண்டு காலம் தலைவராய் இருந்தவரும் கலை, இலக்கியப்பணிகளில் புரட்சி செய்தவருமான கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. உலகின் 8-வது அதிசயமாக திருவள்ளுவருக்கு கன்னியா குமரியில் 133 அடி உயர சிலை அமைத்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கன்னியா குமரியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க சார்பில் முழுஉருவ வெண்கல சிலை அமைப்பது என்றும் அதனை ஓராண்டுக்குள் மு.க.ஸ்டாலின் கொண்டு திறந்து வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கன்னியாகுமரி பேரூர் செயலாளர் குமரி.ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், ஒன்றிய அவைத் தலைவர் ராஜகோபால், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் யோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×