search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
    X

    காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

    காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள மூலஸ்தம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் வாழ்முனி தம்பதியர் மூலஸ்தம்மன் கோவிலை அமைத்தனர்.

    திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மன் அருளால் நிறைவேறிய நிலையில் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலும் கோவிலின் புகழ் பரவ தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர்.

    இந்த நிலையில் கோவிலை கட்டிய வாழ்முனியின் பேரனும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அதிமுக பிரதிநிதியுமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் கோவிலை மறு நிர்மாணம் செய்தார்.

    கடந்த 2 நாட்களாக கணபதி ஹோமம் தொடங்கியாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் கோவிலின் விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் ஓத வாண வேடிக்கைகள் முழங்க சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.

    கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் இரவு நடைபெற்ற அம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மைத்ரேயன் எம்பி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.கே.எம். சின்னையா, அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மனோஜ்பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், வழக்கறிஞர் முத்தியால்பேட்டை ஆர்.வி.உதயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிமுக மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியினை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஜோதியம்மாள் தொடங்கிவைத்தார்.
    Next Story
    ×