search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் பழைய பாலத்தின் 18 மற்றும் 20-ம் தூண்கள் இடிந்து விழுந்தன
    X

    கொள்ளிடம் பழைய பாலத்தின் 18 மற்றும் 20-ம் தூண்கள் இடிந்து விழுந்தன

    எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் இருந்த கொள்ளிடம் ஆற்றின் 18 மற்றும் 20-ம் தூண்கள் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தன.
    திருச்சி:

    முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.

    இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் ஆறாவது தூணில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.

    இந்த விரிசல் வியாழக்கிழமை அன்று மேலும் அதிகமானது. இதனால் அந்த தூண் அப்படியே தண்ணீருக்குள் இறங்கியபடியே சென்றது. நேற்று முன்தினம் காலை சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீருக்குள் இறங்கியது.

    இதனால், எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் பழைய பாலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிடம் பழைய பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர்.

    இந்நிலையில், விரிசல் ஏற்பட்டிருந்த கொள்ளிடம் ஆற்றின் 18 மற்றும் 20-ம் தூண்கள் இன்று இடிந்து ஆற்றுக்குள் விழுந்தன. நள்ளிரவில் தூண்கள் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×