search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரி கைது
    X

    2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரி கைது

    2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    திண்டுக்கலை சேர்ந்தவர் பாலாஜி(வயது 44). இவர் மீது கோவை மாவட்ட போலீஸ் நிலையங்களில் விபசார வழக்கு, கஞ்சா வழக்கு என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    குறிப்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் 220 கிலோ கஞ்சா, பீளமேட்டில் 216 கிலோ கஞ்சா, ராமநாதபுரத்தில் 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் இவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பாலாஜி மீது வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாலாஜியை பீளமேடு போலீசார் இன்று கைது செய்தனர். இவர் மீது பெரியகடை வீதி, சரவணம் பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே விபசார வழக்குகளும் உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு வடவள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் மீது ஆயுததடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    விசாரணையில், சூலூரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதனாவர்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளி வந்த பின்னர் பாலாஜி தலைமறைவானார். அதன் பிறகு விபசாரம், கஞ்சா, ஆள் கடத்தல் என இவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து பாலாஜி கோவையில் இருந்து வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.அவரது செல்போன் எண் மூலம் போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர் பெங்களுரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் லட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, ஜீவரத்தினம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பாலாஜியை பிடிக்க பெங்களுர் சென்றனர். அங்கு வைத்து அவரை நேற்று கைது செய்தனர். 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

    பின்னர் கோவை அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலாஜிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல கஞ்சா கும்பல், விபசார கும்பலுடன் தொடர்பு உள்ளது. அவர்கள் யார்- யார்? என போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே பாலாஜியுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×