search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் பெரும் திரளாக கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி - கமல்ஹாசன்
    X

    மக்கள் பெரும் திரளாக கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி - கமல்ஹாசன்

    கிராம சபை கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்துகொள்வதை பார்க்கும் போது மகிழ்சியாக இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை  :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    இதனை ஏற்று கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்யம் தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் கலந்துகொண்டார்.

    இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம், நெமிலிச்சேரி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கலியாம்பூண்டி, செங்கட்டூரில் நடந்த கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ரங்கராஜன், ராஜநாராயணன், கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமாரவேல், ஏ.ஜி.மவுர்யா, ஸ்ரீபிரியா, சவுரிராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    தன்னுடைய வேண்டுகோளை ஏற்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராம சபை கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்துகொள்வதை பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது சுதந்திரத்தை மிகச்சரியான புரிதலுடன் நாம் கொண்டாடுகிறோம்.

    இதேபோன்று அனைத்து கிராம சபை கூட்டங்களிலும், நாம் அனைவரும் விழிப்புடன் கலந்துகொண்டு, நம் நாட்டு வளர்ச்சியின் எதிரிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கவனத்துடன் இருப்போம்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 
    Next Story
    ×