search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் - ரெங்கநாதன் வலியுறுத்தல்
    X

    திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் - ரெங்கநாதன் வலியுறுத்தல்

    திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி நீர்பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #DMK

    மன்னார்குடி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி மற்றும் புகழுஞ்சலி கூட்டம் நேற்று மாலை நடந்தது.

    மன்னார்குடி நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய அமைதி பேரணி மேலராஜ வீதி வழியாக பெரியார் சிலை அருகே சென்று முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் தி,மு.க., திராவிடர் கழகம், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் , வர்த்தக சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி நீர்பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் பேசும் போது கூறியதாவது:-


     

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திருவாரூரில் அமைக்காமல் அருகே உள்ள விளமல் என்ற கிராமத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அமைத்தார். மேலும் அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதித்துறை, கல்வித்துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் கொண்ட பெருந்திட்ட வளாகத்தை இந்தியாவிலேயே முன்மாதிரியாக உருவாக்கினார்.

    சொந்த மண்ணில் ஆசையாக கருணாநிதி உருவாக்கியுள்ள இந்த வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். மேலும் இந்த பெருந்திட்ட வளாகத்துக்கு ‘கலைஞர்’ வளாகம் என பெயர் சூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi #DMK

    Next Story
    ×